வேலுாா் அரசு பொருட்காட்சி

 


        வேலூர் மாங்காய் மண்டி அருகில் ஸ்ரீ கிருபா டிரேடர் மைதானத்தில் தொடங்கப்பட்ட அரசு பொருட்காட்சியில் அரசு செய்த சாதனைகள் திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள், அரசு திட்டங்கள், சிறப்பு செயலாக்க திட்டங்கள் குறித்து கண்காட்சிகளாக 27 அரசு துறை அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு சாரா நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கான சிறப்பு பொழுது போக்கிற்காக ராட்டினங்கள், விளையாட்டு அம்சங்களும் உள்ளன. தேவையான உணவுக் கூடங்கள் மற்றும் அங்காடிகள் போன்றவை பொருட்காட்சியில் இடம் பெற்று உள்ளன.


           இந்த அரசு பொருட்காட்சியில் தினமும் கலை நிகழ்ச்சிகள், பொங்கலை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. பொருட்காட்சியில் காவல் துறையின் சார்பில் நாய் கண்காட்சிகள், காவல் துறை நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த அரசு பொருட்காட்சியினை பொதுமக்கள் அனைவரும்  கண்டு ரசிக்கலாம்