பெற்றோரை பரிதவிக்க விட்ட மகன்களின் நிலைமை
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பொன்னை கிராமத்தில் வசித்து வரும் வேணுகோபால் முதலியார் தனது மகன்களுக்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொத்தை பிரித்துக் கொடுத்தார் சொத்தை பெற்றுக்கொண்ட பிள்ளைகள் அவருக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் மிகவும் துன்புறுத்தி வந்தனர் அதனால் அவர் வேலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் தானமாக கொடுத்த சொத்தை எனக்கு திருப்பி தரவேண்டுமென விண்ணப்பம் செய்திருந்தார் விசாரணையில் பெற்றோர் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல வாழ்வு சட்டம் பிரிவு 4(1) மற்றும் 23(1) கீழ் வேணுகோபால் முதலியார் எழுதிக்கொடுத்த தான செட்டில்மென்ட் ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்கள்