கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்?

*கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்? .......அறிக்கை கேட்கிறார் ஆணையர்......!*
 
*தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின் கீழ் 44,120 கோயில்கள் உள்ளன...!*


இந்தக் கோயில்களில் அர்ச்சகர், எழுத்தர், ஓதுவார் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் ........மேற்பட்ட கோயில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.......!


*இவர்கள், அரசு ஊழியர்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்....!*


*இதைத்தொடர்ந்து, 7-வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.....!*


*ஆனால், அரசாணை அமல்படுத்தப்படாததால் கோயில் பணியாளர்கள் பழைய ஊதியத்தையே பெற்று வருவதாக கூறப்படுகிறது....!*


*இந்நிலையில், திருக்கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட சம்பள விகிதங்களை.....*


*நடைமுறைப்படுத்தப்பட்டதற்கானம்மண விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் ....என*


*அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவு.....!!*