தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது*
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
மொத்தம் 156 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 4700 ஊராட்சி தலைவர்கள், 37,830 ஊராட்சி உறுப்பினர்கள் மொத்தம் 45,336 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைய தேர்தலில் மொத்தம் இன்று 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். சுமார் 2,00,000 ஊழியர்கள் இன்றைய தேர்தல் பணயில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று உள்ளாட்சி தேர்தல்: வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?*
உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், அரசு பணியாளர்களின் புகைப்பட அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்கள், 100 நாள் பணிக்கான அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு இதில் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது