சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெரிய பாதையில் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன அட்டை


சபரிமலைக்கு புனித யாத்திரை  பெரு வழியில் எருமேலியில் இருந்து கிளம்பி  பம்பை வழியாக சென்று சன்னிதானம் அடைகின்றோம்.  இதில் நீலிமலை ஏறி சபரிபீடம் வந்தவுடன் Q கூப்பன் ஆன் லைனில் பதிவு செய்து பிரிண்ட்டவுட் வைத்திருப்போர் வரிசையும் Q கூப்ன் இல்லாதோருக்கு சபரி பீடம் வழியாகவும் ஐயனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கின்றனர். மேலும் பெருவழியில் வரும் பக்தர்களுக்கென்று எந்தவிதமான முன்னுரிமையும் இதுவரை கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது பெருவழியில் யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கென்று கரிமலையில் பாஸ் கொடுக்கப்படுகின்றது. இதனை பத்திரமாக வைத்துக்கொண்டு அப்பாச்சி மேட்டிற்கு அடுத்த மரக்கூட்டத்தை அடைந்தவுடன் அந்த பாஸை காவலர்களிடம் காண்பித்தால்  அவர்கள் சிறப்பு வரிசைக்கு அனுமதி அளிப்பார்கள். இதன் மூலம் பெருவழியில் யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் சற்று சிரமம் இல்லாமல் ஐயனை தரிசிக்கலாம். ஆகவே பெருவழியில் யாத்திரை  மேற்கொள்ளும் ஐயப்பன்மார்கள் கரிமலையில் தலா ஒவ்வொருவரும் பாஸ் வாங்க மறக்க கூடாது. அதே போல் மரக்கூட்டத்தில் அதனை கான்பித்து சிறப்பு வழியை உபயோக படுத்த வேண்டும். வேறு யாராவது காண்பிக்க கேட்டால் காண்பித்துவிட்டு ஞாபகமாக வாங்கி வைத்து கொள்ளவும். மேற்கண்ட தகவலை தேவசம்போர்டு தலைவர் திருகோபாலகிருஷ்னன் அவர்கள் தெரிவித்தார்கள். 
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா