எப்படி வாழ்ந்தாலும் குறை கூறுவார்கள்

 கணவன் மனைவி இருவரும் குதிரையில் ஏறி வெளியே சென்று கொண்டிருந்தார்கள். 


 சிறிது தூரம் சென்றதும் அவ்வழியே வந்த ஒருவன் கூறுகிறான் - பாவம் வாயில்லாத ஜீவன் மீது இரண்டு பேரும் செல்கிறார்கள். 


உடனே மனைவி மட்டும் குதிரையில் இருந்து இறங்கிவிட்டார். கணவன் மட்டும் குதிரையில் உட்கார்ந்து செல்கிறான். 


  இன்னும் சிறிது தூரம் சென்றதும் மற்றொருவன் வருகிறான். அவன் அவர்களை பார்த்து இரக்கம் இல்லாதவன் மனைவியை நடக்க வைத்து அவன் மட்டும் குதிரையில் செல்கிறானே என்று கூறி விட்டு போறான். 


உடனே கணவன் குதிரையில் இருந்து இறங்கி, மணைவியை குதிரையில் உட்கார வைத்து விட்டு கணவன் நடந்து செல்கின்றனர்.         


     இன்னும் சிறிது தூரம் சென்றதும்அவ்வழியே இன்னொருவன் வருகிறான் 


அவன் மணைவியை  பார்த்து விட்டு இவள் பெரிய கொடுமைகாரியாக இருப்பாள் போல, கணவனை நடக்க வைத்து விட்டு இவள் குதிரை மீது உட்கார்ந்து வருகிறாளே என்று கூறி விட்டு சென்று விட்டான். 


உடனே கணவன், மணைவி இருவரும் குதிரையில் உட்காராமல் நடந்து சென்றனர். 


   சிறிது தூரம் சென்றதும் மற்றொருவன் வருகிறான். அவர்களை பார்த்து விட்டு இவர்கள் முட்டாளாக இருக்கிறார்களே. குதிரையை வைத்துக் கொண்டு பிறகு ஏன் நடந்து செல்கிறார்களே என்று சொன்னான். 


இதிலிருந்து என்னா தெரிகிறது என்றால், நாம் எப்படி வாழ்ந்தாலும் இந்த உலகம் நம்மை குறை கூறிக் கொண்டு தான் இருக்கும். 
நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வாழ வேண்டாம். 
நாம் நன்றாக வாழ்ந்தாலும் நம்மைப் பற்றி குறை கூறுவார்கள். நன்றாக வாழவில்லையென்றாலும் நம்மைப் பற்றி குறை கூறுவார்கள். 
வாழ்வது ஒரு வாழ்க்கை. மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்.