*உணவுப் பொட்டலத்தை அவர்களின் கையில் கொடுக்கும்போது, அவர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரிஞ்சது பாருங்க... அதைப் பார்க்கும்போது, மனசுக்குள்ள ஏதோ பண்ணுச்சு சார்... அந்தப் போதைக்கு நிகரானது இந்த உலகத்தில எதுவுமே இல்லை...*
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்பவர். இவர், தொடர்ந்து 1 ஆண்டுகளாக ஒரு நாள்கூட இடைவிடாமல் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, வயதான முதியவர்களுக்கு, அநாதைகளாக ரோட்டில் உள்ளவர்களுக்கு என 20 பேருக்கு மதிய உணவு கொடுத்து வருகிறார். இவரின் இந்தச் செயலால் பலபேர் ஒரு வேளை உணவை நிம்மதியாக வயிறார சாப்பிடுகின்றனர்.
`என்னால் சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை!' - சாலையோர மக்களின் பசி தீர்க்கும் ஸ்ரீஅன்ன பூரணி டிரஸ்ட்
மதிய உணவு கொடுத்துவிட்டு வந்த செய்தியாளர் ரவி(எ) ரவிச்சந்திரனிடம் பேசினோம். ``உடலில் ஆற்றல் இருக்கின்றவரை உழைக்கிறார்கள். பொருளீட்டும் வரை எல்லாம் சரியாகத்தான் நடக்கின்றன. வயதான பின் அவர்களுடைய பிள்ளைகளே அவர்களை பாரமாகக் கருதும் வேளையில், ஒருவேளை சோறு கிடைத்தாலே போதும் என்ற எண்ணத்தில் வாழ்கின்றவர்கள் ஏராளமானவர்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள்.
அவர்களை நாம் அன்றாடம் சந்தித்தாலும், அவர்களுக்காக நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடிவதில்லை. மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுகிறோம். அதே போன்று ஏழைக் குழந்தைகள் ஒருவேளை உணவு கிடைத்தாலே போதும் என்ற நிலையில் ஏக்கத்துடன் வாழ்கிறார்கள். இதை என்னால் சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை.
சாலையோரம் வசிக்கும் குழந்தைகள்
சாலையோரம் வசிக்கும் குழந்தைகள்
சரி அவர்களுக்காக நாம் என்ன செய்ய முடியும் ஒரு வேளை உணவாவது வாங்கிக் கொடுக்கலாமே என நினைத்து 2019 ஜனவரி 1-ம் தேதி அன்று வாங்கிக் கொடுத்தேன். உணவுப் பொட்டலத்தை அவர்களின் கையில் கொடுக்கும்போது, அவர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரிஞ்சது பாருங்க... அதைப் பார்க்கும்போது, மனசுக்குள்ள ஏதோ பண்ணுச்சு சார்... அதன்பிறகு, அது அப்படியே தொடர்ந்தது.
அந்த மாதம் முழுவதும் கொடுத்துட்டேன். அதன் பிறகு என்னிடம் பணம் இல்லை. 20பேருக்கு உணவு சமைக்க ஒரு நாளைக்கு 500 ரூபாய் செலவு ஆகிறது. அதனால், என்னுடைய `"ஸ்ரீஅன்னபூரணி டிரஸ்ட்" அமைப்பு மூலம் என்னுடைய நண்பர்களிடம் உதவிகள் கேட்டேன். நண்பர்களும் உதவினார்கள். அதன் மூலமும் சில மாதங்கள் உணவு கொடுக்க முடிந்தது.
`என்னால் சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை!' - சாலையோர மக்களின் பசி தீர்க்கும் ஸ்ரீஅன்னபூரணி டிரஸ்ட் நிறுவனர் ரவிச்சந்திரன்
அதன் பிறகு ஸ்ரீஅன்னபூரணி டிரஸ்ட் அமைப்பின் மூலம் வெளியில் உதவி கோரினோம். சிலர் அவர்களின் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட தினங்களில் ஒருநாள் உணவுக்கான செலவை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனாலும், பெரிதாக உதவி கிடைக்கவில்லை என்றாலும் என்னால் முடிந்த அளவுக்கு இதைச் செய்து வருகிறேன்.
இதோ ஓராண்டு முடிந்துவிட்டன. இரண்டாம் வருடத்தை நோக்கிச் செல்கிறேன்” என்றவர், இந்த செயல் மட்டுமல்லாமல் இரத்த தானம் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ முகாம் நடத்துதல், மற்றும் பல்வேறு நலதிட்ட உதவிகள் நடத்தி வருவதாகவும் இதற்கு பணம் உதவி மற்றும் உடல் உழைப்பு நல்கி வரும் ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் அனைத்து நிர்வாகிகளுக்கும் மற்றும் டிரஸ்டிற்கு பணம் உதவி பொருலுதவி வழங்கி ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தங்கள் இல்லத்தில் நடக்கும் விழாக்களில் உணவு மீதம் இருந்தால் எங்களை எந்த நேரத்தில் அழைத்தாலும் நாங்களே நேரில் வந்து பெற்று கொண்டு அதை ரோட்டில் இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் வழங்குவோம் என்றும் எங்களை தொடர்புகொள்ள 9894146061 என்ற எண்ணிற்கு அழைக்களாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் ஶ்ரீ அன்னபூரணி திருமண தகவல் மையம் துவக்க உள்ளதாகவும் மிக குறைந்த பதிவு கட்டணம் 100 மட்டும். இதில் கிடைக்கும் பணத்தில் மேலும் பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்ய உள்ளதாக தெரிவித்தவர் எந்த கஷ்டம் வந்தாலும் ஒருபோதும் உணவு தருவதை நிறுத்த மாட்டேன்” என்றார்.
*உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்*
தொகுப்பு: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார். (9150223444)