கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்"
"அறநிலையத்துறை அதிகாரி வேண்டுகோள்!!
வேலூர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கான மனிதநேய பயிற்சி வகுப்பு தோட்டப்பாளையம் காட்பாடி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது வேலூர் மண்டல உதவி ஆணையர் சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும் கஷ்ட நேரத்தில் கடவுளை வழிபட்டு முறையிடவும் கோயிலுக்கு வருகிறார்கள் அவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் கோயிலுக்கு வரும் பணக்காரர்களுக்கு மாலை விபூதி வழங்குகிறீர்கள் அதேபோல பக்தர்களுக்கு அன்புடன் விபூதி மட்டும் வழங்கினால் போதும் நீண்ட வரிசையில் பெண்கள் முதியோர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நிற்க முடியாது அவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் அனைத்து கோவில்களிலும் விரைவில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட உள்ளன. கோவில்களுக்கு என தலவிருட்சம் மரங்கள் உள்ளன இது போன்ற மரங்களை கோவில்களில் வளர்த்துப் பேணி காக்க வேண்டும் இவ்வாறு பேசினார் இதில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் மாதவன் பரந்தாமன் கண்ணன், நிர்மலா,ரமேஷ் அறநிலைய குழு உறுப்பினர் புதுப்பாடி ராஜா மற்றும் கோயில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.