<no title>

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை மற்றும் கேஎம்கே. கல்வி அறக்கட்டளை சார்பில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு. ஆற்காடு மார்ச்_27   ராணிபேட்டை மாவட்டம் முத்துகடை பேருந்து நிலையத்தில் கொரானா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மக்கள் பொது நலன் கருதி விழிப்புணர்வு வேண்டுகோள் நோட்டீஸ் முக கவசம் ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் வெங்கடேசன் தலைமையில் கேஎம்கே கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவர் எம் சிவலிங்கம் முன்னிலையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை பொருளாளர் மோகன சக்திவேல்  கேஎம்கே கல்வி அறக்கட்டளை உறுப்பினர் மதன் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளர் இளஞ்செழியன் ரவி ஆகியோர் முத்துக்கடை நவல்பூர் பஜார் பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் 2000 நோட்டீஸும் 1500 முக கவசம் 300 டெட்டால் சோப்பும் வழங்கப்பட்டது நோட்டீஸில் குறிப்பாக பொதுமக்கள் கூடுமானவரை அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியே வீட்டை விட்டு செல்லாமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றும் வீட்டில் சத்தான உணவை உண்டு போதிய அளவு தண்ணீரை குடித்து நமது நுரையீரல் சிறப்பாக செயல்பட தினமும் காலை மாலை மூச்சுப் பயிற்சியுடன் லேசான சில உடற்பயிற்சிகளையும் செய்து ஆரோக்கியமாக வாழ (covid19) என்னும் கொடிய கொரோனா வைரஸ் ஒழிக்க மத்திய அரசும் மாநில அரசும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி ஒன்றுபட்டு வைரஸை விரட்டி அடிப்போம் மக்களின் நலனுக்காக தங்கள் உயிரை பணயமாக வைத்து சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவம் உழியர்கள் காவல்துறையினரை சார்ந்த அனைவரும் வளமோடும் நலமோடும் வாழ அவர்களுக்கு நாம்  நன்றி தெரிவித்து  அவருக்காக பிரார்த்தனை செய்வோம் என அறக்கட்டளை சார்பில்  தெரிவித்தனர்.


செய்தி: நிருபர் கி.ரவிச்சந்திரன் 9894146061