ஆற்காடு பேருந்து நிலையத்தில் தன்னார்வலர்கள் பணி அமர்த்தும் நிகழ்ச்சி. ராணிப்பேட்டை மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவியாக இணைந்து செயல்பட தன்னார்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்இந்நிலையில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய தன்னார்வலர்களை பணியமர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் மற்றும் ராணிப்பேட்டை காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அறிவுரைகளை வழங்கியும் அவர்களை பணி அமர்த்தினர் இவர்களது பணி காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கறி கடைகளில் கூடும் பொதுமக்களை சமூக இடைவெளியில் நிற்கவைத்து அத்துமீறி கூட்டத்தை தவிர்ப்பது மற்றும் காவல்துறையினருக்கு உதவியாக இருப்பது உள்ளிட்ட பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்வார்கள் என ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார். இதில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கீதா அன்னாமலையார் அறக்கட்டளை பொன்.கு.சரவணன் எம்.ஜி.ரவி, வட்டாச்சியர் இந்துமதி, துணை வட்டாச்சியர் மகாலட்சுமி,ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் டாக்டர்.சுரேஷ்பாபுராஜ், காய்கறி மார்கெட் தலைவர் ஜானகிராமன், நகராட்சி பொறியாளர் ஆனந்த பத்மநாபசிவம், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
<no title>