மருத்துவம் சார்ந்த சந்தேகத்திற்கு Tele - Medi Call Center' சேவை' ராணிப்பேட்டை கலக்டா் தொடங்கிவைத்தார்

 மருத்துவம் சார்ந்த சந்தேகத்திற்று ' ராணிப்பேட்டை கலக்டா் தொடங்கிவைத்தார்


     இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் (COVID - 19) நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பற்றிய புரிதல்களும் விளக்கமும் பொதுமக்களுக்கு இன்று அத்தியாவசிய தேவை உள்ளது.மேலும் பொதுமக்கள் ஊரடங்கு


காலங்களில் அவசர தேவை விடுத்து மற்ற தேவைகளுக்கு மருத்துவரை அணுகுவதை


இலகுவாக்கும் முயற்சியில், 'Tele - Medi Call Center' சேவை


மாவட்ட ஆட்சியர்


அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கவும், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளை பொது மக்களுக்கு ஏற்படுத்தவும், கொரோனா வைரஸ் (COVID - 19) நோய்த்தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 X 7 என்ற சுழற்சி முறையில் பொது மக்களுக்கு சேவை புரிவதற்காக கட்டுப்பாட்டு அறையில் புதியதாக Tele - Medi Call Center(தொலை மருத்துவ கட்டுப்பாட்டு அறை) என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள், தங்களுடைய உடல் உபாதைகளுக்கு தொலை மருத்துவ எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தங்களுக்கு உள்ள சிறு சிறு மருத்துவ பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இக்குழுவில் ஆறு மருத்துவர்கள் மற்றும் ஆறு செவிலியர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இக்குழுவினர் பொது மக்கள் சேவைக்காக, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து செயல்பட்டு Tele- Medi Counselling (தொலை மருத்துவ சேவை)


ஆலோசனைகளை வழங்குவார்கள். இந்த ஆலோசனைகளை பெற கீழ்வரும் தொலைபேசி


எண்களை 24 X 7 தொடர்பு கொண்டு கொரோனா "கோவிட்-19" நோய்த்தொற்று குறித்த


மருத்துவ மற்றும் பொது சுகாதார ஆலோசனைகளை பெறலாம்.



  • 04172-273163

  • 04172-273164


இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் Tele-Medi Counselling (தொலை மருத்துவ சேவை) சேவையில் தன்னார்வலர் தனியார் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு மருத்துவம் சார்ந்த அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து இராணிப்பேட்டை மாவட்டத்தை முழுமையாக பாதுகாக்கும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர்  .ச.திவ்யதர்ஷினி,  அவர்களால் இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா (COVID - 19) நோய் தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.