ராணிப்பேட்டை மாவட்டத்தில் "covid 19" , கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணியின் அடுத்த கட்டமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்று ரத்த மாதிரிகள் சேகரிப்பதற்காக நடமாடும் இரத்த பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த வாகனத்தின் மூலமாக ஏற்கனவே நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்ட நபர்களுக்கு தொடர்புடைய நபர்களுக்கும் ரத்த மாதிரி எடுத்து அவர்களுக்கு தொற்று நோய் உள்ளதா? என்பதை அவர்களது வீட்டிற்கு சென்று இரத்த மாதிரி எடுப்பதற்கு பிரத்தியேக வாகனம்(Mobile Testing Kiosk)ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இவ்வாகனத்தை கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொற்று நோய் உள்ளவர்கலாக கண்டறியப்பட்ட அவர்களின் வசிப்பிடமான மேல்விஷாரம், கல்மேல்குப்பம், பாணாவரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனத்தைக் கொண்டு ரத்தப் பரிசோதனை ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும் இந்த ரத்த மாதிரி சேகரிக்கும் வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச. திவ்யதர்ஷினி ரத்த மாதிரி சேகரிப்பு பணியை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார அலுவலர் வேல்முருகன் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சிங்காரவேலு, டாக்டர் பிரகாஷ் அய்யப்பன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்த வாகனத்தை உபயம் செய்த B.B.K.leathers , சிப்காட் இராணிப்பேட்டை நிறுவனத்தின் இயக்குனர் குமார் ராணிப்பேட்டை மாவட்ட வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரத்த மாதிரி சேகரிப்பு நடமாடும் வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்