அமைச்சர்  .கே.சி.வீரமணி மளிகைப்பொருட்களை வழங்கி பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்கள்

  கொரோனா ரைவஸ் தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு வரும் 1100 தூய்மைப் பணியாளர்களுக்கு மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  .கே.சி.வீரமணி அவர்கள் மளிகைப்பொருட்களை வழங்கி பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்கள்


. திருப்பத்தூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுப்பதற்கு பல்வேறு தொடர் நடவடிக்கைகள் தீவிரமாக மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. இப்பணிகளில் முக்கியமாக நாள்தோறும் ஒவ்வொரு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், தெருக்களை தூய்மை செய்யும் பணிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு அவர்களின் மகத்தான பணிகளை போற்றும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் ஜோலார்பேட்டை நகராட்சியில் 150 பணியாளர்களுக்கும், திருப்பத்தூர் நகராட்சியில் 309 பணியாளர்களுக்கும், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 354 பணியாளர்களுக்கும், நாட்றாம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 250 பணியாளர்களுக்கும் மற்றும் நாட்றம்பள்ளி பேரூராட்சியில் 37 பணியாளர்களுக்கும் என மொத்தம் 1100 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் 10 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய், மற்றும் 2 குளியல் சோப்புகள் அடங்கிய தொகுப்பை தன்னுடைய சொந்த செலவில்   வணிவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  .ம.ப.சிவன்அருள்  அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.   வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையினால் இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீறிய வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சிறப்பான நோய் தடுப்பு நடவடிக்கையினால் இந்நோய் கட்டுக்குள் இருந்து வருகின்றது. கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் தொடர்ந்து வீடு வீடாக சென்று தூய்மை செய்யும் பணிகள், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை இடைவிடாமல் தன்னலமற்று மக்களின் ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உண்ணத நோக்கத்தில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களின் பணியானது இக்காலக்கட்டத்தில் போற்றுதலுக்குரியது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரண நிதியுதவியுடன் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளார்கள். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரண நிதியுதவியுடன் ரேஷன் பொருட்களை விலையின்றி வழங்கியுள்ளார்கள். தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து ஏழை எளிய அனைத்து மக்களும் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்திட நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். இந்த நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்க முக்கிய பங்களிப்பை அளிக்கும் உங்களின் இந்த மகத்தான பணியினை போற்றும் வகையிலும் மேலும் ஊக்கத்தை அளிக்கும் விதமாக என்னுடைய சொந்த செலவில் மளிகை பொருட்களை வழங்கியுள்ளேன். மற்ற பகுதிகளுக்கும் இவைகள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த பேரிடர் காலத்தில் பணிபுரியும் உங்களுக்கு தமிழக அரசும், ஒவ்வொரு மக்களும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று தனது பாராட்டுல்களை தெரிவித்து  அமைச்சர் அவர்கள் பேசினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம்   வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவர்களை சார்ந்த அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகக்குடிய வகையில் ஆரோக்கியமாக இருந்து வருகின்றனர். இதுவரையில் சோதனை சாவடி மற்றும் இரயில், பேருந்து நிலையங்களில் 32,969 நபர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 1520 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 726 நபர்கள் தனிமை காலம் முடிவுற்றுள்ளனர். இதுவரையில் 1149 நபர்களுக்கு இரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டதில் 771 நபர்களுக்கு நோய் தொற்று இல்லை. 361 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி நோய் தொற்று அறவே ஒழிக்க திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து மக்கள் வெளியில் நடமாடாமல் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கிட நடமாடும் காய்கறி வாகனங்கள் 289 இயக்கப்பட்டு வருகின்றது. ஒருங்கிணைந்த வேலூர் -22 இராணிப்பேட்டை - 38 திருப்பத்தூர் - 17 நோயாளிகள் அனைவரும் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடித்து விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தெரிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் பொதுமக்கள் அனைவரும் கடைபிடித்து ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு எற்படும் நோய் தொற்று குறித்து தானகவே முன்வந்து அச்சமடையாமல் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசு மக்களை காப்பாற்றவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்கள்  .ராமஜெயம்,  .சாவித்திரி, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர்  .டி.டி.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  .கே.ஜி.ரமேஷ், ஜோலார்பேட்டை சீனிவாசன், முன்னாள் ஊராட்சிக்குழு தலைவர்  .லீலாசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர்  .ஆர்.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  .பிரேம்குமார்,  .சந்திரன்,  .கனகராஜி,  .பாலாஜி, பேரூராட்சி செயல் அலுவலர்  .நாகராஜன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.