கிருமி நாசினி தடுப்பு நடைபாதையை மாவட்ட ஆட்சித் தலைவர்  ச. திவ்யதர்ஷினி திறந்து வைத்தார்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அரசு மாவட்ட  தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் கிருமி நாசினி தடுப்பு நடைபாதையை மாவட்ட ஆட்சித் தலைவர்  ச. திவ்யதர்ஷினி அவர்கள்  திறந்து வைத்தார்கள். வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 40,000 ரூபாய் செலவில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பினர் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைத்துக் கொடுத்துள்ளனர். உடன் சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் இயக்குனர்  சந்திரகாசன், செயலாளர்  புனிதவேல், சிறு குறு தொழில் நிறுவன ஒருங்கிணைப்பாளர் முரளி இணை இயக்குனர் சண்முகநாதன். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  ரவி வாலாஜா அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்  டாக்டர்.சிங்காரவேலு, டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் உடனிருந்தனர்.