இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆலோசனை வழங்கும் பொருட்டு "இடர் மேலாண்மை குழு" வருவாய் விவசாயம் தோட்டக்கலை ஆகியவை அனைத்து துறை உட்பட அலுவலர்கள் அரசு சாரா சேவை நிறுவனங்கள் மருந்து தயாரிப்பாளர்கள் மருந்து பொருட்கள் வினியோகஸ்தர்கள் வணிகர் சங்கம் காய்கறி வியாபாரிகள் சங்கம் ஆகியோரைக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் செயல் உறுப்பினராக ம.ஜெயச்சந்திரன் அவர்களை கொண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.மயில்வாகனன் சார் ஆட்சியர் இளம்பகவத் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பேபி இந்திரா ஆகியோரை உள்ளடக்கி மொத்தம்24 உறுப்பினர்கள் கொண்ட இடர்பாடு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று 15.4. 2020 மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இக்குழுவில் அது பரவாமல் தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு ஏப்ரல் 15 முதல் மே 3 வரை மத்திய அரசால் காலநீட்டிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து இக்காலநீட்டிப்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் கிடைக்க செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து சில்லரை வணிகர்களுக்கு காலதாமதம் இல்லாமல் வினியோகிப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது . மேலும் ரவா, ஆட்டா போன்ற பொருட்கள் விநியோகிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது மொத்த விற்பனையாளர்கள் சில்லறை வணிகர்கள் தங்களது பொறுப்பில் வாகனங்களுக்கான அனுமதி சீட்டு பெற்று வினியோகம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி சீட்டு காலதாமதமின்றி உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அடுமனை (பேக்கரிகள்) பிரட், பன் மட்டும் கடைக்கு வெளியே வைத்து சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. காய்கறிகள் கட்டுப்பாடுள்ள பகுதிக்குள் வாகனம் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டும் விற்பனையாளர்கள் நோய்தடுப்பு உடுப்புகளுடன் விற்பனை மேற்கொள்ள வேண்டும். இப்பகுதிக்குள் காய்கறி வினியோகம் உறுதி செய்ய வேண்டும். கால்நடை தீவனங்கள் விநியோகம் தொடர்பான அனுமதிச்சீட்டு சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் வழங்கப்பட்டு கால்நடை தீவன விநியோகத்திற்கான அனுமதிச்சீட்டு வழங்குவது தொடர்பாக பத்திரிகை செய்தி வெளியிட கால்நடை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மருந்துப்பொருட்கள் வினியோகம் தடையில்லாமல் வினியோகம் செய்வது உறுதிப்படுத்தப்பட்டது. "முக கவசம்"அதிக விலைக்கு விற்காமல் இருப்பு வைத்து முறையாக விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. மருந்துப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கொண்டு மருந்து உற்பத்தி தடைபடாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டது. ஏப்ரல் அதற்குப்பிறகு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தளர்த்தப்படும் சேவைகள் குறித்து பத்திரிக்கை வாயிலாக தெரியப்படுத்தப்படும்.
<no title>இடர் மேலாண்மை குழு ராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் நடைபெற்றது