ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருக்கிறது. இந்த சூழ்நிலையில் covid- 19 தொற்றிலிருந்து பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், c zinc tablet வழங்கும் திட்டத்தை . மேலும் ஆயுர்வேதிக் மற்றும் சித்த மருத்துவ முறைகள் குறித்த கண் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கபசுர குடிநீர் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு அதன் நன்மைகள் குறித்து. எடுத்து கூறப்பட்டது இதனை தொடர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் எளிமையான யோகாசனங்களும் கற்பிக்கப்பட்டன. உடன் மாவட்ட சுகாதார அலுவலர் வேல்முருகன்,மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் . சுசி கண்ணம்மா மற்றும் வாலாஜா, அரக்கோணம் அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
கபசுர குடிநீர், நிலவேம், குடிநீர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்ஷினி, தொடங்கி வைத்தார்