பெரம்பலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருப்பவர் நாகராஜ பூபதி. இவர் இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி பெரம்பலூருக்கு பதவி உயர்வு பெற்று வந்தவர். வந்த உடன் இவருக்காகவே தீபாவளி பண்டிகை வந்ததாக நினைத்து கொண்டு நிருபர்களுக்கு தர வேண்டும் என கட்டாய வசூல் வேட்டை
தீபாவளி பண்டிகையை யொட்டி கனிமவளத் துறை , கூட்டுறவுத் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம்,
வேளாண் துறை, நகராட்சி நிர்வாகம்,
வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை மாவட்ட அலுவலர்களிடம் தீபாவளி பண்டிகையொட்டி செய்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி
ஒவ்வொரு துறையிலும் ரூ 20,000 என வசூல் செய்து
பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு செய்தியாளர்கள் பெயரை சொல்லி மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வசூல் செய்த பணத்தில் தீபாவளிமுன்னிட்டு கிப்ட்பாக்ஸ் செய்தியாளர்களுக்கு முறையாக தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
மேலும் துறை சார்ந்த அலுவலர்கள் செய்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என சொன்னதால் தான் கொடுப்பதாகவும்
ஆனால் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இந்த பண வசூல் வேட்டையை நினைத்து மாவட்ட அலுவலர்கள்புலம்பி தள்ளுகின்றனர்
ஆனால் பண வசூலில் ஈடுபட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, மற்றும் ஓட்டுநர் செல்வராஜ், இந்த நடவடிக்கையை செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆகியோர், பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவர் நாகராஜ பூபதி, ஓட்டுநர் செல்வராஜ் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் நல்லது. எனவும். செய்தியாளர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள் இல்லை என்றால் நிருபர்களுக்கு வந்த சோதனை என நினைத்து தலையில் அடித்துக்கொள்வதை தவிரவேறுவழியில்லை.